Friday, July 22, 2011

கண்ணதாசன் பாடல் வரிகள்-2

பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
திரைப்படம்: நானும் ஒரு பெண்

கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே
கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை

கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா - நல்ல
இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா

கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே

பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில்
பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில்
பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா - எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா

கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே

உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை
காணாத கண்ணில்லையே

2 comments:

  1. மறக்க முடியாத வரிகள் ..

    ReplyDelete
  2. /////பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில்
    பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
    பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில்
    பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
    கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா - எந்தக்
    கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா////கண்ணதாசன் என்றா சொல்லவா வேணும் ....

    ReplyDelete