Tuesday, July 26, 2011

3டி படங்கள் காட்டும் சாம்சங் கேலக்ஸி




ஸ்மார்ட்போன் மார்க்கெட் திடீரென 3டி தொழில்நுட்பம் பக்கம் யூ டர்ன் அடித்துள்ளது. இதுவரை 2டி மற்றும் 3டி படங்களை விஷேச கண்ணாடி அணிந்துகொண்டுதான் பார்க்க முடியும். ஆனால், இந்த கண்ணாடி தொல்லையை தூக்கி எறியும் வகையில் வெறும் கண்ணால் 3டி படங்களை காட்டும் புதிய போனை சாம்சங் அறிமுகம் செய்ய உள்ளது.

ஏற்கனவே எல்ஜி ஆப்டிமஸ் 3டி மற்றும் எச்டிசியின் இவோ 3டி போன்கள் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து மார்க்கெட்டில் சக்கை போடு போடுவதால், தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த புதிய 3டி போனை சாம்சங் அறிமுகம் செய்கிறது.

கேலக்ஸி 3டி என்ற பெயரில் வர இருக்கும் இந்த போன் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தை கொண்ட திரையை பெற்றுள்ளது. சாம்சங் இணையதளத்தில் வெளியிட்டு்ள்ள தகவல்களின்படி, இந்த போன் 4.3 இஞ்ச் தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது, 1.2 அல்லது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 மெகாபிக்செல் கொண்ட பின்பக்க கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ளாஷ், ஆட்டோ ஃபோகஸ் அம்சங்கள் கொண்ட இந்த கேமரா ஹைடெபினிஷனில் 3டி படங்களை காட்டும்.

இந்த போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருவதால், எல்ஜி, எச்டிசி 3டி போன்களை விட இது சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த போன் விரைவில் நடைபெற இருக்கும் 2011 எலக்ட்ரானிக் ஷோவில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. 

இந்த போனின் விலை மற்றும் அதிக விபரங்களை தெரிந்துகொள்ள அதுவரை பொறுத்திருக்கவேண்டும். அதேசமயம், எல்ஜி, எச்டிசி 3டி போன்களைவிட இது அதிக விலை கொண்டதாக இருக்கும் என்பது சந்தை நிபுணர்களின் கணிப்பு.

No comments:

Post a Comment