Saturday, July 23, 2011

2016ம் ஆண்டுடன் 'சிம்பையான் ஓஎஸ்'க்கு நோக்கியா குட்பை!

Symbian OS


மொபைல்போன் உலகில் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெகுபிரபலமாக திகழ்கிறது. சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியா போன்கள் இயக்குவதற்கு எளிதாக இருப்பதால், வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வரும் 2016ம் ஆண்டுடன் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களை தயாரிப்பதை நிறுத்திக்கொள்ள நோக்கியா முடிவு செய்துள்ளது.

இதை உறுதிபடுத்தும் விதமாக, சமீபத்தில் நோக்கியா அறிமுகப்படுத்திய நோக்கியா என்-9 போனில் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டு வந்துள்ளது.

கம்ப்யூட்டர்களுக்கான பிராசஸர் தயாரிப்பில் புகழ்பெற்ற இன்டெல் நிறுவனத்திடமிருந்து மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நோக்கியா பெறுகிறது.

இந்த நிலையில், சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பெறுவதற்கான ஒப்பந்தம் வரும் 2016ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. மேற்கொண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களை தயாரிக்க நோக்கியா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நோக்கியாவின் மார்க்கெட்டிங் இயக்குனர் வைரல் ஓஜா கூறியதாவது:

" நோக்கியா மொபைல்போன்களில் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதை படிப்படியாக குறைத்துக்கொள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வரும் 2016ம் ஆண்டுவரை மட்டுமே சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் நோக்கியா போன்கள் தயாரிக்கப்படும்.

இதேபோன்று, மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களை தயாரிக்கும் திட்டமும் இல்லை. தற்போது, என்-9 போன் மட்டும் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தயாரிக்கப்படுகிறது. ஆனால், மற்ற போன்களையும் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தயாரிக்கும் திட்டம் இல்லை ," என்று கூறினார்.

No comments:

Post a Comment