கடும் சந்தை போட்டி காரணமாக ரூ.15,000 விலையில் ஐபோனை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பல முன்னணி நிறுவனங்களுக்கு இடையில் நீயா, நானா போட்டி நடந்து வருகிறது. இதனால், மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், சாம்சங், எச்டிசி போன்ற நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு போன்களின் மார்க்கெட்டும் எகிறி வருகிறது. இதனால், நோக்கியாவும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இதுபோன்ற பல்முனை தாக்குதல்களால் மார்க்கெட் போய்விடுமோ என்ற அச்சம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குறைந்த விலையில் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.மேல்தட்டு மக்கள் மட்டுமல்லாது அனைத்து பிரிவு மக்களுக்கும் ஏற்ற விலையில் நடப்பு நிதிஆண்டுக்குள் இந்த போனை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தனது வாடிக்கையாளர் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும் என்பதை ஆப்பிள் உணர்ந்துகொண்டு புதிய குறைந்த விலை ஐபோன் வடிவமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.இதுகுறித்து பிரபல மொபைல்போன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த போன் எந்த ரகத்தை சேர்ந்ததாக இருக்கும் என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.தற்போது ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஐபோன்-4 நடுத்தர ரகத்தையும், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன்-5 ஆகியவை உயரிய ரகத்தையும் சேர்ந்தவை. இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 3ஜிஎஸ் ரகத்தை சேர்ந்த பட்ஜெட் போனாக வரும் என்று மொபைல்போன் சந்தை கிசுகிசுக்கிறது. மேலும், இந்த போன் ரூ.15,000 விலையில் அறிமுகம் செய்யப்பட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment