Friday, July 29, 2011

விரைவில் புதிய டியூவல் சிம் போன்: ஜி-பைவ்

G five 9900i




இந்தியாவின் மொபைல்போன் உற்பத்தியில் மூன்றாவது இடம் வகிக்கும் ஜி-பைவ் நிறுவனம், பெருவாரியான அளவில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது. குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் போன்களை அறிமுகப்படுத்தி வருவதால், ஜி-பைவ் போன்களுக்கு மார்க்கெட்டில் தனி இடம் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், ரூ.2,999 விலையில் புதிய போனை ஜி-பைவ் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. ஜி-9900ஐ என்ற குறியீட்டு பெயரில் வரும் இந்த போன் கொடுக்கும் பணத்திற்கு நிறைவான வசதிகளை தரும் வகையில் இருக்கும்.

டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்ட இந்த போன் 2.4 திரையுடன் கிவெர்ட்டி கீபேடு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பார்மெட்டுகளிலும் ஆடியோ, வீடியோ பைல்களை இயக்கும் வசதியை கொண்டிருக்கிறது.

விஜிஏ பார்மெட்டில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதிகொண்ட 1.3 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எப்எம் ரேடியோ, சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் உண்டு.

போதுமான சேமிப்பு திறன் கொண்ட இந்த போனில் 8 ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இது 140 கிராம் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள டியூவல் கேமரா மூலம் வீடியோ காலிங்கும் செய்ய முடியும். இதற்கு தக்கவாறு ஜிபிஆர்எஸ் கனெக்ட்டிவிட்டி மற்றும் புளூடூத் ஆகிய இணைப்பு வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். கம்ப்யூட்டருடன் இணைத்துக்கொள்ள ஏதுவாக யுஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது.

ரூ.2,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த போன் மைக்ரோமேக்ஸ், மேக்ஸ், ஸ்பைஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

அழகான 3d புகைப்படங்கள்





Wednesday, July 27, 2011

அழகு கிருஷ்ணா





Tuesday, July 26, 2011

3டி படங்கள் காட்டும் சாம்சங் கேலக்ஸி




ஸ்மார்ட்போன் மார்க்கெட் திடீரென 3டி தொழில்நுட்பம் பக்கம் யூ டர்ன் அடித்துள்ளது. இதுவரை 2டி மற்றும் 3டி படங்களை விஷேச கண்ணாடி அணிந்துகொண்டுதான் பார்க்க முடியும். ஆனால், இந்த கண்ணாடி தொல்லையை தூக்கி எறியும் வகையில் வெறும் கண்ணால் 3டி படங்களை காட்டும் புதிய போனை சாம்சங் அறிமுகம் செய்ய உள்ளது.

ஏற்கனவே எல்ஜி ஆப்டிமஸ் 3டி மற்றும் எச்டிசியின் இவோ 3டி போன்கள் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து மார்க்கெட்டில் சக்கை போடு போடுவதால், தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த புதிய 3டி போனை சாம்சங் அறிமுகம் செய்கிறது.

கேலக்ஸி 3டி என்ற பெயரில் வர இருக்கும் இந்த போன் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தை கொண்ட திரையை பெற்றுள்ளது. சாம்சங் இணையதளத்தில் வெளியிட்டு்ள்ள தகவல்களின்படி, இந்த போன் 4.3 இஞ்ச் தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது, 1.2 அல்லது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 மெகாபிக்செல் கொண்ட பின்பக்க கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ளாஷ், ஆட்டோ ஃபோகஸ் அம்சங்கள் கொண்ட இந்த கேமரா ஹைடெபினிஷனில் 3டி படங்களை காட்டும்.

இந்த போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருவதால், எல்ஜி, எச்டிசி 3டி போன்களை விட இது சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த போன் விரைவில் நடைபெற இருக்கும் 2011 எலக்ட்ரானிக் ஷோவில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. 

இந்த போனின் விலை மற்றும் அதிக விபரங்களை தெரிந்துகொள்ள அதுவரை பொறுத்திருக்கவேண்டும். அதேசமயம், எல்ஜி, எச்டிசி 3டி போன்களைவிட இது அதிக விலை கொண்டதாக இருக்கும் என்பது சந்தை நிபுணர்களின் கணிப்பு.

Monday, July 25, 2011

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

Sunday, July 24, 2011

மனதில் நின்றவை!




கண்ணதாசன் அனுபவ மொழிகள் -1



அனுதாபத்தோடு பார்க்கும் கண்களுக்குக்
குற்றவாளியும் நிரபராதியே.

ஆத்திரத்தோடு பார்க்கும் கண்களுக்கு
நிரபராதியும் குற்றவாளியே.

சினேகன் கவிதைகள் - முதல் மழைத்துளி

சில மழைத்துளி
சுடும்...
சில மழைத்துளி
குளிரும்...
சில மழைத்துளி
மணம் வீசும்...
சில மழைத்துளி
நேசம் பேசும்...
சில மழைத்துளி
பசி போக்கும்...
சில மழைத்துளி
ருசிக்கும்...
சில மழைத்துளி
கவிதை தரும்...
சில மழைத்துளி
கவலை தரும்...
சில மழைத்துளி
பகைக்கும்...
சில மழைத்துளி
நகைக்கும்...
இன்னும் பல
மழைத்துளி விழும்...
இன்னும் பல
வினை செய்யும்...
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்க்க நேர்ந்த
அந்த கணத்தில் விழுந்த
முதல் மழைத்துளி மட்டும்
அப்படியே கிடக்கிறது...
ஈரம் காயாமலும்
எதுவும் நிகழ்த்தாமலும்
மனசுக்குள் விழுந்த
அந்த முதல் துளி
இருக்கும்வரை...
எத்தனையோ அடைமழையில்
குடையின்றி நடந்தபோதிலும்...
எந்த மழைத்துளியும்
அதுபோல்
நனைத்ததில்லை
இதுவரையில் என்னை...

சாமுத்ரிகா லட்சணத்துடன் வரும் ஏசர் ஸ்மார்ட்போன்

Acer Iconia Smart Phone

கம்ப்யூட்டர் தயாரிப்பில் கிடைத்த தொழில்நுட்ப அனுபவத்தை வைத்துக்கொண்டு ஏசர் மொபைல்போன் தயாரிப்பு துறையிலும் புகுந்து விளையாடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏசர் அறிமுகப்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்கள் முன்னணி நிறுவனங்களை அவ்வப்போது கதிகலங்க வைக்கிறது.

இதேபோன்று,சாமுத்ரிகா லட்சணம் நிறைந்த புதிய ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்குகிறது ஏசர். ஐகானியா என்ற பெயரில் வரும் இந்த ஸ்மார்ட்போன் டேப்லெட் என்று கூறப்படும் உயரிய வகை ஸ்மார்ட்போன் வர்க்கத்தை சேர்ந்தது.

மல்டிமீடியா மற்றும் டாக்குமெண்டுகளை கையாள்வதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட இந்த போன் வடிவமைப்பிலும் அசத்துகிறது. அகன்ற 4.8இஞ்ச் கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்ட இந்த போன் டிஸ்பிளே அப்ளிகேஷன்களை இயக்கும்போது மிகவும் துல்லியமாக இருக்கிறது.

இதில், அதிவேக செயல்திறன் கொண்ட 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஸ்நாப்ட்ராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் மல்டி டாஸ்கிங் பணிகளை திறம்பட செய்கிறது.

மேலும், 720பி ஹைசடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் செய்ய வல்ல ஆற்றல்வாய்ந்த 8மெகாபிக்செல் கேமராவுடன் வருகிறது. அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ பார்மெட்டுகளை இந்த போனில் இயக்க முடியும்.

எப்எம் ரேடியோவை எக்ஸ்ட்ரா ஸ்பீக்கரில் கேட்டு மகிழும் வகையில் ஆர்டிஎஸ் இணைப்பு வசதியும் உண்டு. 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் இருக்கிறது.

வை-ஃபை,ஜிபிஆர்எஸ், எட்ஜ் மற்றும் 21எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட்டில் தகவல்பரிமாற்ற வசதியையும் பெற முடியும். 8ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த போனில் தேவையென்றால் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மூலம் கூட்டிக்கொள்ள முடியும். 

ஜிபிஎஸ் மற்றும் ஏஜிபிஎஸ் நேவிகேஷன் வசதிகளும் இதில் உள்ளது. நல்ல பேக்கப்பை கொடுக்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், சார்ஜ் இறங்குவதை பற்றி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை.

ஏசர் ஐகானியா ஸ்மார்போன் சிறப்பம்சங்கள்:

4.8இஞ்ச் தொடுதிரை

ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

1.1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

720பி வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்ட 8மெகாபிக்செல் கேமரா

3ஜி,வை-ஃபை,புளூடூ்த் 3.0 வெர்ஷன்,ஜிபிஆர்எஸ்,எட்ஜ் இணைப்பு வசதிகள்

ஜாவா

வீடியோ கேம்கள்

மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்

8ஜிபி சேமிப்பு திறன்;32ஜிபி வரை கூட்டிக்கொள்ளலாம்

ஏசர் ஐகானியாவின் விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது எச்டிசி சென்சேஷன் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்-2

கேள் மனமே கேள்...

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்


அந்தந்த வயதில்...
இருபதுகளில்...
எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்... இன்னும்...
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்...
**
முப்பதுகளில்...
சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
**
நாற்பதுகளில்...
இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
**
ஐம்பதுகளில்...
வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
**
அறுபதுகளில்...
இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..
**
எழுபதுக்கு மேல்...
இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ...
ஜன கண மண...
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து