பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: பாதகாணிக்கை
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?வீடுவரை உறவுவீதி வரை மனைவிகாடு வரை பிள்ளைகடைசி வரை யாரோ?ஆடும் வரை ஆட்டம்ஆயிரத்தில் நாட்டம்கூடிவரும் கூட்டம்கொள்ளிவரை வருமா? (வீடு)தொட்டிலுக்கு அன்னைகட்டிலுக்குக் கன்னிபட்டினிக்குத் தீனிகெட்ட பின்பு ஞானி! (வீடு)சென்றவனைக் கேட்டால்வந்துவிடு என்பான்வந்தவனைக் கேட்டால்சென்று விடு என்பான்! (வீடு)விட்டுவிடும் ஆவிபட்டுவிடும் மேனிசுட்டுவிடும் நெருப்புசூனியத்தில் நிலைப்பு! (வீடு)
அருமையான வரிகள்
ReplyDeleteப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்