நாட்டின் ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் பஜாஜ் பல்சர் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவகையில் பல்வேறு சிசி திறன்கொண்ட மாடல்களில் பல்சர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிகபட்சமாக 220சிசி திறன்கொண்ட பல்சர் பைக்கில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது பஜாஜ்.
சிவப்பு நிற பல்சரில் கறுப்பு,சிவப்பு இரட்டை வண்ணத்தில் மாற்றம் கண்டுள்ளது. கிராங்க் கேஸ் பக்கவாட்டு ஸ்கூப்புகளில் கருப்பு வண்ண பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பின்புறத்தில் கறுப்பு நிறம் கொண்ட பக்கவாட்டு ஸ்கூப்புகளில் சிவபபு நிற பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு நிற பல்சரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது கறுப்பு மற்றும் சில்வர் கலர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எஞ்சினுக்கு மேல் சிலிண்டர் ஹெட் பழைய பைக் போன்றே கறுப்பு பூச்சுகொண்டதாகவே இருக்கிறது.
விரைவில் 250சிசி பல்சரை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆயத்தமாகி வருவதால், 220சிசி பல்சர் மார்க்கெட்டை தொலைத்துவிடாமல் இருக்க இதுபோன்ற காஸ்மெட்டிக் சேஞ்ச் வேலைகளை பஜாஜ் மேற்கொண்டுள்ளதாக ஆட்டோ வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பை-டோன் 220சிசி பல்சர் ஷோரூம்களை வந்தடைந்துவிட்டதாகவும், இருப்பில் உள்ள 220சிசி பல்சர் பைக்குகள் விற்பனையானவுடன் புதிய பல்சரை விற்பனைக்கு கொணடுவர டீலர்களை பஜாஜ் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment