இப்போதெல்லாம்என் கவிதைகளைப் படித்துவிட்டுயாராவது என்னைத்தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள்..ஆனால் ஒவ்வொருவரும்வெவ்வேறு மனச் சித்திரத்தோடு வருகிறார்கள்.சிலர் மார்புவரைதத்துவத்தாடி நுரைத்துத்தொங்கும் கிழவனாகஎன்னை உருவகித்துக் கொள்கிறார்கள்..அவர்கள் வாழ்வு முழுதும்ஒற்றைச் சொல்லில்தங்கள் துயர் அனைத்தையும்துடைத்தெறிந்துவிடும்ஒரு குருவைத்தேடி அலைபவர்கள்என யூகிக்கிறேன்சிலர் என்னைஎப்போதும் புகையும்துப்பாக்கியுடன் திரியும்புரட்சிக் காரனாககற்பனை செய்து கொள்கிறார்கள்அவ்வாறு வருபவர்கள்பனியன்களில் இருந்து மட்டும்பத்து விதமானசே குவேராக்களை நான் அறிவேன்.இன்னும் சிலர்மலர்மை கொஞ்சும்ஒரு பெண்ணை எதிர்பார்த்து வருகிறார்கள்அவர்கள் என்னுடன்'சேர்ந்து 'ஒரு கவிதை எழுதும்கனவோடு வருகிறார்கள்வேறு சிலர்ஏதாவது பெரிய குற்றம் ஒன்றைச்செய்துவிட்டு வருகிறார்கள்அவர்கள் எதிர்பார்த்து வருவதுபாவ மன்னிப்புத் தண்ணீருடன்ஒரு பாதிரியை ...பெண்களில் அநேகம் பேர்செத்துப் போனஅவர்கள் அப்பாக்களைத்தேடியே வருகிறார்கள்அல்லதுஅவர்களைத் துரத்தும்இருத்தலில் இருந்து விடுவித்துமார்பு நெருங்கஅணைத்துத் தூக்கிகுதிரை மேல் இருத்திகாவிரிக்கரை முழுதும்செலுத்திப் போகும்ஒரு வந்தியத் தேவனாய் நான் இருப்பேன்என்று கற்பனையில் வருகிறார்கள்எனக்கு சைக்கிள் கூடஓட்டத தெரியாதுஎன்று தெரிந்ததும்அவர்கள் திரும்பி வருவதே இல்லைபெரும்பாலான நபர்களைகீழ்வீட்டுப் பெண்மணியேஅப்படி யாரும் இல்லைஎன்று விரட்டிவிடுகிறாள்அவள் எனையார் முகமும்பார்த்துப் பேசாதமூன்றுமாத வாடகை தராதசந்தேகக் கஞ்சாக் கேசாகவேஅறிந்திருக்கிறாள்இருப்பினும் அவளையும் மீறியாராவது வந்துவிடுகிறார்கள்இதோ இப்போது கூடயாரோ அழைப்பு மணியைத்துன்புறுத்துகிறார்கள்கணினியில் இருந்துஇந்தக் கவிதை காயாத கையுடனேஎழுந்து கதவு திறக்கிறேன்நீலப் பூக்கள்ஒழுகும் சுடியில்ஒட்டகச் செருப்பில்திகிரிக் கண்ணாடிக் கடியில்எண்ணெய்த் துளிகள் போன்றுமினுங்கும் கண்களுடன்வந்தவள் கேட்கிறாள் ..''மிஸ்டர் வந்தியத் தேவன்?''- போகன்
Monday, August 29, 2011
வந்தியத் தேவனின் காதல் ..
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.