Monday, April 16, 2012

சார்லி சாப்ளின் பயன்படுத்திய ஆடம்பர கார்

ஹாலிவுட்டில் தனது நடை உடை பாவனைகளால் கோடானு கோடி மக்களை சிரிக்க வைத்த நடிகர் சார்லி சாப்ளினின் 123வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூறும் இந்நாளில் அவர் பயன்படுத்திய ஆடம்பர காரை பற்றியும் தெரிந்துகொள்வோம்.

மவுன மொழி படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் சார்லி சாப்ளினின் நடிப்புக்கு இன்றளவும் உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். சார்லி சாப்ளினை ரோல் மாடலாக ஏற்று வெற்றி பெற்ற நகைச்சுவை நடிகர்களின் கதைகள் ஏராளம்.

அந்த அளவுக்கு தனது நகைச்சுவை நடிப்பால் கவர்ந்த சார்லி சாப்ளின் கடந்த 1929ம் ஆண்டு பியர்ஸ் ஆரோ சொகுசு காரை வாங்கினார்.இந்த கார் திறந்து மூடும் வசதி கொண்டது. இந்த காரில் அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டதால், ஒரு நேரத்தில் இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் ஏக பிரபலம்.

வெறும் 10000 கார்கள் மட்டுமே பியர்ஸ் ஆரோ ஆடம்பர கார்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டன. சரித்திரத்தில் சார்லி சாப்ளின் போன்றே பியர்ஸ் ஆரோ ஆடம்பர கார்களுக்கும் முக்கிய இடம் உண்டு.







No comments:

Post a Comment